பதிவு செய்த நாள்
23
மே
2019
02:05
பள்ளிப்பட்டு: ஈச்சம்பாடி விஜயராகவ பெருமாள் கோவில், 2017ல் இந்த கோவில், புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இதற்கான பணிகளை, ஈச்சம்பாடியை பூர்வீகமாக கொண்ட ஈச்சம்பாடியார் வம்சத்தினர் மேற்கொண்டிருந்தனர்.
அதை தொடர்ந்து, நித்திய பூஜைகள் நடந்து வருகின்றன.இங்கு, சனிக்கிழமை அவதார உற்சவ திருவிழா கொண்டாடப்பட உள்ளது.அன்று, காலை, 10:30 மணிக்கு, திருமஞ்சனம், பகல்,
12:30 மணிக்கு, வேத பிரபந்த சாற்றுமறையும் நடக்கிறது. அதை தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு, பெருமாள், வீதியுலா புறப்பாடு ஆகிறார்.