பதிவு செய்த நாள்
23
மே
2019
02:05
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், திருஞானசம்பந்தர் இசை விழா நடைபெற்றது. திருக்கழுக்குன்றத்தில் பல்லவர் பொக்கிஷமாக , வேதகிரீஸ்வரர் கோவில், 500 அடி உயரத்தில், மலை மீது அமைந்துள்ளது. தாழக்கோவிலாக, பக்தவச்சலேஸ்வரர் மற்றும் திரிபுர சுந்தரி அம்மன் கோவில்கள் உள்ளன.நான்கு வேதகங்கள் மற்றும் சமயகுரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும் இவை விளங்குகின்றன.
சமயகுரவர்கள் நால்வரில் ஒருவரான, திருஞானசம்பந்தரின் இசை விழா, ஆண்டுதோறும் வைகாசி மாதம், மூல நட்சத்திர திருநாளில், நடைபெறுவது வழக்கம்.அதன்படி, இந்தாண்டு விழா, நேற்று முன்தினம் (மே., 21ல்)நடந்தது. இதில், திருஞானசம்பந்தருக்கு விசேஷ அபிஷேகம், தீப ஆராதனை நடந்தது.ஓதுவார் சொக்கலிங்கம் குழுவினரின் தேவார இன்னிசையும், இரவு, 7:30 மணிக்கு, திருஞானசம்பந்தர் என்ற தலைப்பில், ஆசிரியர் குமாரின் சொற்பொழிவும் நடந்தது. விழாவில், வேலூர் இணை ஆணையர் தனபால், கோவில் செயல் அலுவலர் குமரன், கணக்காளர் விஜயன், சிவாச்சாரியார்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.