பதிவு செய்த நாள்
30
மே
2019
02:05
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பெரியவீட்டுக்கொட்டாய் கன்னியம்மன் கோவில், மண்டல பூஜையை முன்னிட்டு, பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
நல்லம்பள்ளி அடுத்த பெரியவீட்டுக்கொட்டாய் கன்னியம்மன் கோவிலில், 48வது மண்டலபூஜை விழா நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் (மே., 28ல்) காலை, 6:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, அம்மன் உற்சவர் ஊர்வலம் நடந்தது. நேற்று (மே., 29ல்) காலை, 10:30 மணிக்கு, இப்பகுதியை சேர்ந்த பெண்கள், பால்குடம் எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.