உடுமலை: எரிசனம்பட்டி, உச்சிமாகாளியம்மன் திருக்கல்யாண உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை ஒன்றியம் எரிசனம்பட்டியில் பிரசித்தி பெற்ற உச்சிமாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, நோன்பு சாட்டுதலுடன் துவங்கி, கடந்த 29ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்று, காளியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அதிகாலை, 4:00 மணிக்கு, திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.சுற்றுப்பகுதி பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். நேற்று, அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது.