கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் காளியம்மன் கோவில் மண்டலாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, பச்சிகானப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு வந்து, அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன், தீபாராதனை, அலங்காரம் நடந்தது. இதில், கிராம மக்கள் நலம் பெற வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் பூஜைகள் நடந்தன.