பழநி: ஞாயிறு பொதுவிடுமுறை தினம், வைகாசி கார்த்திகை காரணமாக பழநி மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள் 3மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழநி முருகன் கோயிலுக்கு சனி, ஞாயிறு தினங்களில், வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை அதிகரித்தது. வைகாசி மாதக் கார்த்திகையை முன்னிட்டு, மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்தினர். பொது தரிசனவழியில் 3 மணி நேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். அய்யம்புள்ளிரோடு, அருள்ஜோதிவீதி, கிரிவீதியில் தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.