* உலகில் யாரும் தனியாள் இல்லை. எப்போதும் கடவுள் உன்னுடன் இருக்கிறார். * உன்னிடம் உள்ள பக்தி உணர்வு ஒன்றே உண்மையான உதவி. * நேர்மையுடன் நடப்பவருக்கு கடவுள் மகிழ்ச்சி என்னும் பரிசை வழங்குவார். * அன்பு இல்லாதவன் செய்யும் வழிபாடு பகல் வஷேம் அன்றி வேறில்லை. * முடிந்தால் விட்டுக்கொடு; மற்றவர் துயரம் போக்க உதவிக்கரம் நீட்டு. * எந்த சூழலிலும் நிதானத்தை இழக்காதே! விவேகமுடன் செயல்படு. * நம்பிக்கை இல்லாமல் எந்த மருந்து சாப்பிட்டாலும் நோய் குணமாகாது. * பிறருக்கு சொல்லும் புத்திமதியை, முதலில் உன் வாழ்வில் செயல்படுத்து. * எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இரு. * ஒழுக்கத்தை உயிராக மதித்திடு. விருப்பம், எதிர்பார்ப்புக்கு இதில் இடமில்லை. * ஆசையை விடாப்பிடியாக அடக்காதே; முன்னை விட பலமடங்கு பலத்துடன் வெளிப்படும். * வளைந்து கொடுக்கும் இயல்பு கொண்டவன் வாழ்வில் பின்னடைவு அடைவதில்லை. * நல்லதும், கெட்டதும் மாறி மாறி வரலாம். எந்நிலையிலும் பயப்படாதே. - அரவணைக்கிறார் ஸ்ரீ அன்னை