ஆந்திராவில் கிழக்கு கோதாவரியில், வாடபல்லி என்ற தலத்தில் அகத்தியரால் ஆராதிக்கப்பட்ட லக்ஷ்மி நரசிம்மர் சேவை சாதிக்கிறார். இவரது நாசிக்கு எதிரேயுள்ள தீபம், சுவாமியின் சுவாசக் காற்றால் அசைந்துகொண்டே இருக்கிறது. ஆனால், திருவடிக்குக் கீழேயுள்ள தீபம் கொஞ்சமும் அசைவதில்லை. இவரது திருவடிகளைப் பற்றினால், அலைபாயும் நம் மனம் அமைதியடையும் என்பது நம்பிக்கை!