சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டிக்கு அருகே சிறுகூடல்பட்டி என்னும் அழகிய சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. மலையரசி அம்மன் திருக்கோயில். இங்கு கருவறை மேலுள்ள விமானம் வைக்கோலால் வேயப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பவுர்ணமியையொட்டி நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தமானது. பவுர்ணமியின் போது புதுப்பானையில் பானகம் கரைத்து அதில் தென்னம்பாளையை இட்டு வைத்து மூன்று நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அந்த மூன்று நாட்களும் வேறு எங்கும் செல்வதில்லை. வெளியூர் சென்றவர்களும் ஊருக்குத் திரும்பி வந்து விடுகிறார்கள். இது ஒரு மரபாக இருந்து வருகிறது.