பதிவு செய்த நாள்
17
ஜூன்
2019
11:06
வத்திராயிருப்பு: சதுரகிரி கோயிலுக்கு வந்த நியூசிலாந்து பக்தரை, போட்டோ எடுத்தபோது முகத்தை மறைத்ததால், சந்தேகமடைந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட்டனர். நேற்று காலை 9:40 மணிக்கு, தாணிப்பாறை கேட் அருகே கோயிலிலிருந்து திரும்பிய நியூசிலாந்தை சேர்ந்த சந்திரசேகரராம் என்பவரை பத்திரிக்கையாளர்கள் இருவர் போட்டோ எடுத்தனர். அப்போது முகத்தை மறைத்து, தன்னை போட்டோ எடுக்க சந்திரசேகரராம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை பார்த்த பாதுகாப்பு போலீசார் அவரிடம் விசாரித்தனர். பின்னர் உடனடியாக ஆட்டோ பிடித்து சந்திரசேகரராம் வத்திராயிருப்பிற்கு திரும்பினார். இதில் சந்தேகமடைந்த தாணிப்பாறையில் இருந்த போலீசார், வத்திராயிருப்பு போலீசிற்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து நியூசிலாந்து பக்தர் சந்திரசேகரராமை, வத்திராயிருப்பு எஸ்.ஐ.,குமார் விசாரித்து, அவரிடமிருந்த ஆவணங்களை வாங்கி சரிபார்த்த பின் அனுப்பி வைத்தார்.