பதிவு செய்த நாள்
17
ஜூன்
2019
02:06
அன்னூர்: கரியாம்பாளையத்தில், நூற்றாண்டு பழமையான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும், 20ம் தேதி நடக்கிறது.
கரியாம்பாளையத்தில், நூற்றாண்டு பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக் கோவிலில் புதிதாக இருநிலை கோபுரமும், முன் மண்டபமும் கட்டப்பட்டு திருப்பணி செய்யப் பட்டுள்ளது.இதையடுத்து, கும்பாபிஷேக விழா வரும், 18ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது.இரவு விநாயகர் வழிபாடு, முதற்கால யாக பூஜை நடக்கிறது. 19ம் தேதி காலையில் இரண்டாம் கால பூஜையும், மதியம் கோபுர கலசம் வைத்தலும், மாலையில் மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது.20 ம் தேதி காலை 10:00 மணிக்கு, கோபுரத்துக்கும், பின்னர் செல்வ விநாயக ருக்கும், கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மூன்று நாட்களும் திருமுறை பாடுதல், நாதஸ்வர கச்சேரி நடக்கிறது.