பதிவு செய்த நாள்
17
ஜூன்
2019
02:06
கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த ஆதண்டார்கொல்லை வளையசெட்டிக்குப்பம் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.அம்மேரி ஆதண்டார்கொல்லை வளையசெட்டிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில், 13ம் தேதி மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், லட்சுமி ேஹாமம், முதற்கால பூஜை, மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.கடந்த 15ம் தேதி, காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, கோமாதா பூஜை, சுமங்கலி பூஜை, நாடிசந்தானம், கடம்புறப்பாடு நடந்தது. காலை 10:00 மணியளவில், கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.