உளுந்தூர்பேட்டை பாலமுருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2019 03:06
உளுந்தூர்பேட்டை: காட்டுஎடையார்பாளையம் ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் மகா கும்பாபி ஷேகம் நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா காட்டுஎடையார்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி கடந்த 13ம் தேதி காலை 6 மணியளவில் மங்கல இசையுடன் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமங்கள் நடந்தது.
காலை 7.30 மணியளவில் முதல் கால பூஜை, யாக கால பூஜையும், இரவு 10 மணியளவில் திருஷ்யாஹூதியும், இரவு 11 மணியளவில் பூர்ணாஹூதி தீபாராதனை வழிபாடு நடந்தது. 14ம் தேதி காலை 7 மணியளவில் இரண்டாம் கால பூஜையும், கோ பூஜையும், காலை 7.30 மணி யளவில் நாடி சந்தானமும், தத்துவார்ச்சனை, காலை 8.45 மணியளவில் மஹா பூர்ணா ஹூதி தீபாராதனை நடந்தது.அதனைத் தொடர்ந்து கலசம் புறப்பாடும், காலை 9.15 மணியளவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராள மானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.