விழுப்புரம் வழுதரெட்டி கெங்கையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2019 03:06
விழுப்புரம்: வழுதரெட்டி கெங்கயைம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் பலர் பங்கேற்று திமித்து நேர்த்திகடன் செலுத்தினர்.விழுப்புரம் வழுதரெட்டி கெங்கையம்மன் கோவிலில் வைகாசி மாத உற்சவ தீமிதி திருவிழா கடந்த 5ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து கெங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் நாள்தோறும் பூங்கரகங்கள், பஞ்சமூர்த்தி சுவாமிகள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 13ம் தேதி அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்தல் நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (ஜூன்., 15ல்) எல்லை காளி கோவிலில் அமுது படைத்தல் மற்றும் தீமிதி திருவிழா நடந்தது.
விழாவில், கோவிலை சுற்றி படுத்திருந்த பக்தர்கள் மீது தீமித்து வந்த பூங்கரம், அவர்கள் மீது நடந்து சென்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பலர் பங்கேற்று தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். இரவு அம்மன் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டினை வழுதரெட்டி பொதுமக்கள் செய்திருந்தனர்.