புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சொற்பொழிவு நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2019 02:06
புவனகிரி: புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன்கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டுடன், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
புவனகிரி திருவருள் இறைப்பணி மன்றம் சார்பில், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு மற்றும், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று முன் தினம் (ஜூன்., 16ல்)இரவு, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பல்வேறு பூஜைகள் நடந்தது.
பின்னர் நடந்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் திருவருள் இறைபணி மன்ற தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கோகுலச்சாரியார் பங்கேற்று பொய்கையாழ்வார் எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.