Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரியகோவிலில் யோகா தினம்: ... வீரபக்த  ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா வீரபக்த ஆஞ்சநேயர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமாயண கால மிதக்கும் கல் கொண்ட பஞ்சவடீயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ராமாயண கால மிதக்கும் கல் கொண்ட பஞ்சவடீயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
12:06

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - புதுச்சேரி வழியில் அமைந்துள்ள விஸ்வரூப ஜயமங்கள பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் வருகிற 23ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இக்கோயில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து  அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் விநாயகரும், இடதுபக்கத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகன்,பரதன் ஆகியோரும் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். 8 மீட்டர் அகலமும், 40 மீட்டர் ஆழமும் கொண்ட பிரமாண்ட தீர்த்த கிணறு உள்ளது. காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.

ராமர் பாதுகை : ராம பாத தரிசனம் என்பது விசேஷமானது. இதற்காக, சுமார் 100 ஆண்டு பழமையான சந்தன மரத்தால் செய்யப்பட்ட ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன.இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் போடப்பட்டுள்ளது.

ராமாயண கால மிதக்கும் கல் : சீதையை மீட்பதற்காக ராமர், இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற இரு வானரங்கள் இந்த பாலப்பணியை நடத்தின. இதில் நளன் என்பவன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன். இதனால் நளன் தன் தந்தையைப்போல் சிற்ப பணியில் சிறந்து விளங்கினான். இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. ராமருக்கு உதவி செய்ய, பாலம் கட்ட பயன்படுத்திய கற்களை மிதக்க செய்து, அசையாமல் பாதுகாத்தான் கடலரசன் சமுத்திரராஜன். இவன் மகாலட்சுமியின் தந்தை ஆவான். எனவே சீதையை மீட்க இந்த உதவியை செய்தான் என கூறப்படுகிறது.இப்படி ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்து தரிசனத்திற்கு வைத்துள்ளார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar