திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த சி.மெய்யூர் திரவுபதி அம்மன் கோவில் தேர் மற்றும் தீமிதி விழா நடந்தது. சி.மெய்யூரில், திரவுபதி அம்மன் மற்றும் கூத்தாண்டவர் சுவாமிகளின் ஆண்டு மகோற்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும், பாரதக் கதை வாசிக்கப்பட்டு, கடந்த 11ம் தேதி உற்சவம் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை கூத்தாண்டவர் திருத்தேர் வீதியுலா நடந்தது. மாலை 6:00 மணிக்கு, திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சக்தி கரகம் அக்னி குண்டத்தில் இறங்க, தொடர்ந்து பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.