பதிவு செய்த நாள்
21
ஜூன்
2019
01:06
குளித்தலை: சுக்காம்பட்டி மாரியம்மன், காளியம்மன், பகவதியம்மன், விநாயகர் பாம்பலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. குளித்தலை அடுத்த, கள்ளை பஞ்., சுக்காம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன், காளியம்மன், பகவதியம்மன், விநாயகர், பாம்பலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்திட கிராம மக்கள் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் காலை, காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். கோவில் அருகில் அமைக்கப்பட்ட யாக சாலையில் விக்னஷே்வர பூஜை, புண்யாகவஜனம், வாஸ்து சாந்தி, கும்பஅலங்காரம், அம்பாள் யாக சாலை பிரவேசம், மூன்று கால பூஜைகள் நடந்தன. கோபுர கலசத்திற்கு யாக சாலையில் இருந்து புனித நீர் எடுத்து, நேற்று காலை, 9:40 மணியளவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, தீபாராதனையும், சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. கிராம மக்கள் மற்றும் விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.