திருத்தங்கல் நாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2019 12:06
சிவகாசி: திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
இக்கோயில் ஆனிபிரம்மோற்சவ விழா கடந்த 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திருத்தங்கல் அப்பன், செங்கமல தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. 13 நாட்கள் நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாவித்தார். 5ம் நாள் விழாவில் மங்களாசாசனம், அப்பன் ரெங்கநாதர் கருட வாகனத்திலும், தாயார் அன்ன வாகனத்திலும் ஊர்வலம் வந்தனர். முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான நேற்று (ஜூன்., 21ல்) தேரோட்டம் நடந்தது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராஜவர்மன் எம்.எல்.ஏ., ராஜராஜன் எஸ்.பி.வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தேர் முன்பு பெண்கள் கோலாட்டம் ஆடி வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.