பதிவு செய்த நாள்
22
ஜூன்
2019
01:06
அன்னுார்: கரியாம்பாளையத்தில், நுாற்றாண்டு பழமையான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கரியாம்பாளையத்தில், நுாற்றாண்டு பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக இருநிலை கோபுரமும், முன் மண்டபமும் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா, 18ம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இரவு விநாயகர் வழிபாடு, முதற்கால யாக பூஜை நடந்தது. 19ம் தேதி காலையில் இரண்டாம் கால பூஜையும், மதியம் கோபுர கலசம் வைத்தலும், மாலையில் மூன்றாம் கால பூஜையும் நடந்தது. நேற்று காலை 10:15 மணிக்கு, கோபுரத்துக்கும், பின்னர் செல்வ விநாயகருக்கும், கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 2,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மூன்று நாட்களும் திருமுறை பாடப்பட்டது. நாதஸ்வர கச்சேரி நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.