பதிவு செய்த நாள்
22
ஜூன்
2019
02:06
மணலி : மழை வேண்டி, சத்குரு சாய்பாபா கோவிலில், 108 போற்றி மற்றும் தூப ஆரத்தி நடைபெற்றது.மாத்தூர், சத்குரு சாய்பாபா கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், மழை வேண்டி நேற்றிரவு 21 லில், சிறப்பு, கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.
இதில், சாய்பாபா, 108 போற்றி, சிறப்பு பூஜை மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது.இதில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, 108 போற்றியை, திருப்பி உச்சரித்து, மழைக்காக வேண்டினர். பின், சிறப்பு ஆரத்தியாக, சாய்பாபாவிற்கு, தூப ஆரத்தி காண்பிக்கப் பட்டது.