பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருவதிகை தேர் மூடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2019 01:06
பண்ருட்டி:தினமலர் செய்தி எதிரொலி காரணமாக வீரட்டானேஸ்வரர் கோவில் தேரை பாதுகாத் திட தார்பாய் மூலம் மூடப்பட்டது.பண்ருட்டி, திருவதிகை, வீரட்டானேஸ்வரர் கோவிலில் இரண்டு தேர்கள் உள்ளன. இந்த தேர்கள் கடந்த 5ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது. கடந்த 14ம் தேதி பிரம்மோற்சவ விழா முடிந்து, தேர் திறந்த வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை வெயில், மழையில் இருந்து பாதுகாத்திட அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.இதனைச் சுட்டிகாட்டி தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் (ஜூன்., 25ல்)செய்தி வெளியானது. அதையடுத்து, வீரட்டானேஸ்வரர் கோவில் தேர்களை பாதுகாத்திட தார்பாய் மூலம் மூடும் பணி நேற்று (ஜூன்., 26ல்) நடந்தது.