Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி நரசிம்மர் கோவிலில் கருடசேவை ஜெனகை மாரியம்மன் கோயிலில் தீர்த்தவாரி உற்ஸவம் ஜெனகை மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் மொட்டை
எழுத்தின் அளவு:
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் மொட்டை

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2019
11:06

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொட்டை போட்டு நேர்த்திக் கடன் செலுத்துவோரிடம் பணம் வசூல் செய்த 13 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு வந்து மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அவர்கள் கோவிலில் உள்ள மண்டபத்தில் ஹிந்து அறநிலை துறையினரிடம் 30 ரூபாய் கொடுத்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது ஒரு பிளேடு மற்றும் சந்தன வில்லை வழங்கப்படும்.பக்தர்கள் மண்டபத்தின் மேல்தளத்துக்கு சென்று அங்குள்ள பணியாளரிடம் டோக்கனை கொடுத்து மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்துவர். கோவில் மண்டபத்தில் மொட்டையடிக்கும் பணியில் 160 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பக்தர்களிடம் கட்டாயப்படுத்தி 50 ரூபாய் வாங்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சமயபுரம் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்தில் ஆய்வு செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில் மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டோர் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து 13 பேரை சஸ்பெண்ட் செய்து கோவில் இணை ஆணையர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar