|  
     ஆனந்தபுஷ்கரணியை தூய்மைப்படுத்தும் பணி
                                        
      
                    
பதிவு செய்த நாள்01
ஜூலை2019
 01:07
 பொன்னேரி: அகத்தீஸ்வரர் குளத்தில், தன்னார்வலர்கள் சிலர், தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றி துாய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது.பொன்னேரி, அகத்தீஸ்வரர் கோவிலின் முகப்பில், ஆனந்தபுஷ்கரணி பெயர் கொண்டு திருக்குளத்தில், பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கின்றன. 
பக்தர்கள் வீசும் குப்பை, குடியிருப்புகளின் குப்பை, ஈம காரியங்களின் கழிவுகள் என, குளம் பாழாகி வருகிறது. இந்நிலையில், பொன்னேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர்கள், 30 பேர், மேற்கண்ட கோவில் குளத்தினை துார் வாரி துாய்மைபடுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த, 23ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இப்பணிகளை துவங்கினர். நேற்று, 2வது நாளாக குளத்தில் இருந்த பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலிதீன் பைகள், துணிகள் உள்ளிட்டவற்றை அகற்றியும், படிகளில் இருந்து, செடி, கொடிகளை அகற்றியும் சுத்தப்படுத்தினர்.தன்னார்வலர்களின் இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது.துாய்மை பணியில் ஈடுபட்டு உள்ள தன்னார்வலர்கள் கூறியதாவது:சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இது போன்ற நீர்நிலைகளை உரிய முறையில் பராமரித்து பாதுகாக்க வேண்டும்.ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இந்த துாய்மை பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம். அடுத்த வாரம் மேலும் சிலர் எங்களுடன் இணைய உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். |