பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவில் தேருக்கு சக்கரம் பொருத்தும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2019 03:07
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவில் திருத்தேருக்கு சக்கரம் பொருத்தும் பணி நேற்று (ஜூன்., 30ல்) நடந்தது.பண்ருட்டி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில் திருத்தேர் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று வீதியுலா நடைபெறும்.கடந்த 30 ஆண்டுகளாக தேர் பழுது காரணமாக தோரோட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது.தேரை புதுப்பிக்க,
இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. பின் 6 மாதத்தில் பணி கிடப்பில் போடப்பட்டது.மீண்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின், திருச்சி பெல் நிறுவனத்தில் தேருக்காக நான்கு சக்கரங்கள் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு அப்படியே கிடந்தது.இந்நிலையில், நேற்று (ஜூன்., 30ல்) அறநிலையத்துறை சார்பில் தேருக்கு சக்கரம் பொருத்தும் பணி கிரேன் மூலம் நேற்று (ஜூன்., 30ல்) நடந்தது.