திருநெல்வேலி பாளையங்கோட்டையிலுள்ள ஆயிரத்தம்மன் கோயிலில். 12 ஆண்டுக்கு ஒருமுறை எருமைகடாவை பலியிடுவது வழக்கம். ஒரே வெட்டில் கழுத்து துண்டாக்கும் ஆளுக்கு தங்க அணிகலனை பரிசாகக் கொடுப்பர். இதனைக் கேள்விப்பட்ட வாரியார் ஆண்டவன் சந்நிதியில் உயிர்ப்பலி கூடாது என்பதை வலியுறுத்தினார். இதைக்கேட்டு விழாக்குழுவினர், கொதித்து விட்டனர். காலம் காலமாக நடக்கும் ஒரு சடங்கை நிறுத்துவதா? இப்படி ஒரு யோசனை சொன்ன வாரியாரையும் அம்மனுக்கு பலியிடுவோம், என கோபத்தில் குதித்தனர். வாரியார் இதுபற்றி காவல்துறையிடம் முறையிட்டார். அவரது பரிந்துரையை ஏற்ற காவல் அதிகாரிகள், அக்கோயிலைச் சுற்றி ஐந்து கி.மீ., தூரத்திற்கு யாரும் கூடிநிற்கக் கூடாதென்று உத்தரவிட்டனர். விழாக்குழுவினரோ தடையை மீறி, எருமையுடன் கோயிலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். போலீசார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அன்று மாலை வாரியார், ஒரு எருமை மாட்டிற்கு மாலை அணிவித்து, அதனையும் அழைத்துக் கொண்டு, திருப்புகழ் பாடிக் கொண்டே அந்தக் கோயிலை வலம் வந்தார். ஆயிரத்தம்மன் சந்நிதியில் நடந்த பூஜையில் கலந்து கொண்டார். ஆயிரக்கணக்கான மக்கள் கூடிநின்று வாரியாருக்கு ஆதரவு அளித்து மகிழ்ந்தனர்.