மனிதன் நிமிடத்திற்கு 15 தடவை, மணிக்கு 900 மூச்சுகள் விடுகிறான். ஆக ஒரு நாளில் 24 மணி நேரத்தில் 21,600 முறை மூச்சு விடுகிறான். மூச்சுக்கு மூச்சு சிவபெருமானே நம்மைக் காக்கிறார் என்ற வகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோயிலின் மேற்கூரையில் 21,600 செம்பு ஆணிகள் அடித்துள்ளனர். திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் கட்டிய கோயில் இது. பாண்டிய நாட்டின் அமைச்சரான இவருக்கு, குருநாதராக சிவபெருமானே காட்சியளித்து அடியவராக ஏற்றுக்கொண்டார். இங்குள்ள மண்டபத்தில் மாணிக்கவாசகர் இடப்புறத்தில் அமைச்சர் கோலத்திலும், வலப்புறத்தில் ஆண்டிக்கோலத்திலும் காட்சியளிக்கிறார்.