மயிலம் : மயிலம் திருமடத்தில் பாலசித்தர் குரு பூஜை விழா நடந்தது.மயிலம் பொம்மபுர ஆதீன திருமடத்தில் பாலசித்தர் மகா குரு பூஜை விழா நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள பாலசித்தருக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு தீபாரதனை நடந்தது. தொடர்ந்து நடந்த குரு பூஜை விழாவிற்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலயசுவாமிகள் தலைமை தாங்கி காசி வழித்துணை விளக்கம்என்னும் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.மயிலம் தமிழ்க் கல்லூரி செயலாளர் ராஜீவ் குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். பொம்மையார் பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லூரி செயலாளர் சிவக்குமார் வரவேற்றார்.
நூலின் முதல் பிரதியை புதுச்சேரி, சிதம்பரம் பாதபூஜை அம்பலத்தாடும் சுவாமிகள் திருமடத் தின் கனகசபை சுவாமி பெற்றுக் கோண்டு வாழ்த்துரை வழங்கினார். திருப்பூர் வாவிபாளையம் அனந்தகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். விழாவில் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் துணைத் தலைவர் ராசகோபாலன். மேலசிவபுரி கணேசன், செந்தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் முத்தப்பன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் இயக்குனர் சண்முகம், காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் முருகசாமி ஆகியோருக்கு சிவஞானி இலக்கிய விருதுகளை மயிலம் ஆதீனம் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியை மயிலம் தமிழ்க் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு தொகுத்து வழங்கினார். மயிலம் சிவப்பிரகாசர் மேல்நிலைப் பள்ளி செயலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.