பதிவு செய்த நாள்
04
ஜூலை
2019
02:07
சிதம்பரம்:சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் நடந்த அமாவாசை அர்த்தஜாம பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிதம்பரம், தில்லைக்காளி அம்மன் கோவிலில் அமாவாசை அர்த்தஜாம அபிஷேக மண்டலி சார்பில் ஆனி மாத அமாவாசையை யொட்டி, சிறப்பு அர்த்தஜாம பூஜைகள் நடந்தது.விநாயகர் மற்றும் பிரம்மசாமுண்டி அம்மனுக்கு நெய் தீபம் வழிப்பாடு, தில்லைக்காளி அம்மனுக்கு நல்லெண்ணெய் அபிஷேக தைலக் காப்பு, பால், தயிர், பழங்கள், வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது.தில்லை காளியம்மனுக்கு வெண்பட்டு சாற்றி, வெட்டிவேர், விளாமிச்சை வேர், செவ்வரளி பூ மாலை அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் அர்த்தஜாம பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.