சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபதி கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றம் நடந்தது.
சாத்துார் வெங்கடாசலபதி கோவில் ஆண்டு தோறும் ஆனி பிரம்மோத்ஸவ திருவிழா 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம் . இத்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 9.50.மணிக்கு கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பட்டர் ரங்கநாதர் பூஜைகளை செய்து திருவிழா கொடியை ஏற்றினார். கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி தலைமை வகித்தார் . சாத்துார் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர். உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் அன்ன வாகனத்தில் சுவாமி நகர்வலம் வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 16 ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது .திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.