பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
11:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோயிலில் ஆனித்திருவிழாவுக்கு ஜூலை 2ல் சாட்டுதல் மற்றும் கம்பம் நடப்பட்டது. நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது
முன்னதாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் கவுமாரியம்மனுக்கு, சிங்கம் வரைந்த கொடியை தொட்டியில் வைத்து, கோயில் முன்புறம் கம்பத்தினை பூஜாரிகள் சுற்றினர். இதனை தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அபிேஷக, ஆராதனை நடந்தது. பூஜைகளை பூசாரிகள் நடராஜன், பாண்டியராஜா, காமுத்துரை, கதிரேசன் செய்தனர். தென்கரை வர்த்தக சங்க தலைவர் பி.சி.சிதம்பரசூரியவேலு, வர்த்தகபிரமுகர்கள் சீத்தாராமன், கனகசபை, மாரியப்பன், அய்யாச்சாமி மற்றும் மண்டகப்படிதாரர்கள் பங்கேற்றனர். வர்த்தக பிரமுகர் பி.பி.எஸ்., பாலசுப்பிரமணியன் திருக்கண் அபிேஷகம் நடத்தினார். ஜூலை 17 வரை 10 நாட்கள் திருவிழா நடக்கும். தினமும் மண்டகப்படிதாரர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். முக்கிய நிகழ்வாக ஜூலை 16ல், 9ம் நாள் திருவிழாவில் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், மறுநாள் 10ம் நாள் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபடுவர். ஏற்பாடுகளை செயல்அலுவலர் அண்ணாதுரை, மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.