பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
11:07
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், ஆனித்திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜருக்கு அபிஷேக, பூஜைகள் நடந்தது.
ஆனித்திருமஞ்சனத்தை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயில் நடராஜர் சன்னதி அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நடராஜருக்கு பால், பன்னீர், தயிர், சந்தனம், பழங்கள் உள்ளிட்ட 16வகையான அபிஷேகங்கள் நடந்தது. அதன்பின் வெளிப்பிரகாரத்தில் நடராஜர், சிவகாமியம்மனுடன் திருவுலா வந்தார். பழநி திருமுருக பக்தசபா சார்பில், பக்தி இன்னிசை கச்சேரியும், மஞ்சள்கயிறு, பழங்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணைஆணையர்(பொ) செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன் செய்தனர்.