பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
02:07
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் கிழக்கு கிராமத்தில், பகவதியம்மன் கோவில் கும்பாபி ஷேக விழா விமரிசையாக நடந்தது. கிருஷ்ணராயபுரம் கிழக்கு கிராமத்தில், பகவதியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 4ல், முதல் கால யாக பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பலவித யாகங்களுக்குப் பின், நேற்று (ஜூலை., 8ல்) காலை 7:00 மணிக்கு, நான்கு கால யாக பூஜையுடன், கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மஹா அபிஷேகம், கோ பூஜை, உள்ளிட்ட பூஜைகளுடன் தீபாராதனை நடந்தது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.