கரூர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தியான மண்டபம் கட்ட கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2019 02:07
கரூர்: கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தியான மண்டபம் கட்ட வேண்டும்’ என, கடவூர் சிவனயடியார்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: கடவூர் வட்டாரத்தில் ஈஸ்வரன் கோவில் இல்லை. சுவாமி தரிசனம் செய்ய வெவ்வெறு இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பழங் கால கோவில்களுக்கு சொந்தமான இடம் கடவூரில் உள்ளது என, அரசு பதிவேடு மூலம் தெரிய வந்தள்ளது. இது குறித்து துணை தாசில்தாரிடம் கேட்டும் உரிய விளக்கமில்லை. அதன்பின் தகவல் உரிமை சட்டத்தில் கேட்டபோது, ஆவணங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஜமாபந்தியில் அரசு பதிவேடு, வரைபடம், சிட்டா நகல் ஆகியவற்றை இணைத்து, இடத்தை அடையாளம் காண மனு செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கோவிலுக்கு சொந்தமான இடத்தை இனம் கண்டு, அதில் தியான மண்டபம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.