பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
03:07
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த சிறுகாட்டூரில் அமைந்த ஸ்ரீ பாலாம் பிகா சமேத ஸ்ரீ வைத்தியாத சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று (ஜூலை., 8ல்) சிறப்பாக நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த சிறுகாட்டூரில் எழுந்தருளியுள்ள பாலாம்பிகா சமேத வைத்தி யாத சுவாமி கோவிலில், கும்பாபிஷேக விழா, கடந்த 1 ம் தேதி அனுக்ஞை பூஜை யுடன் துவங்கியது. கடந்த 5ம் தேதி காலை, தீர்த்த சங்கிரஹணம், அக்னி சங்கிரஹணம், யாக சாலை நிர்மானம் நடந்து, மாலை யாகசாலை பூஜை துவங்கியது. 6 ம் தேதி காலை இரண் டாம் கால யாகசாலை பூஜையும், பரிவாரமூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது, பின்னர் 3ம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று (ஜூலை., 8ல்) காலை 5 மணிக்கு 6ம் கால யாகசாலையும், தீபாராதனை நடந்தது.காலை 9 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி பரம்பரை தரும ஆதீனம், 26வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச் சாரிய சுவாமிகள் முன்னிலையில் 9.20 மணிக்கு கலசத்திற்கு மகா கும்பாபிஷேகமும், 9.30 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடந்தது.