பதிவு செய்த நாள்
09
ஜூலை
2019
03:07
திருப்பூர்:திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீநடராஜர், சிவகாமி அம்மனுக்கு, ஆனித்திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது.
சிவபெருமாள் அக்னியின் அம்சமாக இருப்பதால், அபிஷேக பிரியராகவும், பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள், அலங்கார பிரியராகவும் இருப்பதாக ஐ தீகம். அதன்படி, ஸ்ரீநடராஜர் சிவகாமி அம்மனுக்கு, ஆண்டுக்கு ஆறு முறை, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார வழிபாடு நடைபெறுகிறது.
மூன்று நட்சத்திர நாளிலும், மூன்று திதி நாளிலும் அபிஷேகம் நடக்கிறது. அதன்படி, ஆனி மாதம் உத்தர நட்சத்திரம், சப்தமி திதியான நேற்று (ஜூலை., 8ல்), ஆனி திருமஞ்சனம் நடந்தது.
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீநடராஜபெருமானு க்கு, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டது.
தொடர்ந்து, பல்வகை மலர்கள், வில்வ மாலைகளை சூட்டி, சிறப்பு அலங்காரத்துடன், பக்தர்க ளுக்கு அருள்பாலித்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள், ஆனித்திருமஞ்சனத்தை தரிசனம் செய்தனர்.திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், கோவில்வழி பெரும் பண்ணை கரிவரதராஜ பெருமாள் கோவில்களிலும், தாயார்கள் மற்றும் எம்பெருமானுக்கு, திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சேவூர் ஸ்ரீ வாலீஸ்வரசுவாமி கோவிலிலும் ஆனித்திருமஞ்சனத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், அவிநாசி, சேவூர் வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.