பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
12:07
தேவகோட்டை:கண்ணங்குடி அருகேயுள்ள நீர்க்குன்றத்தில் சுயம்புவாக உருவாகிய அமிர்த கடேஸ்வரருக்கு, அபிராமி அம்பாள், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, பைரவர், நவகிர கம் பரிவார மூர்த்திகளுடன் அந்த ஊரைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட அரசு வக்கீல் காசி நாதன், கிராமத்தினர் இணைந்து கோவில் கட்டினர்.
இக்கோவில்கும்பாபிஷேகம் நேற்று (ஜூலை., 11ல்) நடந்தது.முன்னதாக பிச்சைகுருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். நேற்று பகல்11:30 மணிக்கு கும்ப ங்களுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சுவாமிகளுக்குமகா அபிஷேகம் சிறப்பு அலங் கார பூஜைகள்நடந்தன.குன்றக்குடி பொன்னம்பல அடிகள் சுவாமி சன்னதியை திறந்து வைத் தார். தலைமையாசிரியர் சீனிவாசன் கும்பாபிஷேக மகிமை பற்றியும், பட்டிமன்ற நடுவர் ராமநாதன் மனக்கோவில் கொண்ட மாணிக்கங்கள் தலைப்பிலும், சென்னை ராஜம் எம்.பி. நாதன் சிவபுராணம் பேசினர். துரைச்சாமி தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. விழா வில் சோமநாராயணன்,வக்கீல் காசிநாதன், டாக்டர்கள் அமுதா காசிநாதன், செந்தில்குமார், கயல், கார்த்திக், கனிமொழி உட்பட பலர் பங்கேற்றனர்.