திருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயில் ஆனித்தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2019 12:07
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே உள்ள திருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயில் ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில் ஜூலை 5 ல் காப்புக் கட்டி உற்ஸவம் துவங்கியது. தினசரி அலங்காரத்தில் அம்பாளும் சுவாமியும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.நேற்று காலை 8:30 மணிக்கு திருக்கோளநாதர், ஆத்மநாயகி அம்பாள், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் 3 தேர்களில் எழுந்தருளினர். காலை 10:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. சுற்று வட்டார நாட்டார்கள் வடம் பிடித்தனர். மதியம் 3:30 மணிக்கு தேர்கள் நிலைக்கு வந்தன. இன்று மாலை தீர்த்தவாரியுடன் உற்ஸவம் நிறைவடைகிறது.