Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) சுகவாழ்வு துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வெற்றி தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
16:46

சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். புதன் ஆக.2 வரை நன்மை தர காத்திருக்கிறார். தற்போது குரு,சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவர்கள் வக்ரமாக உள்ளனர். அவர்கள் வக்கிரம் அடைந்தாலும் அதே ராசியிலேயே இருக்கிறார்கள். ஒரு கிரகம் வக்கிரம் அடையும் போது அந்த கிரகத்தால் இயல்பாக செயல்பட முடியாது. ஆதலால் கெடுபலன் உண்டாகாது.

சுக்கிரனால் பொருளாதார வளம் கூடும். வசதி வாய்ப்பு பெருகும். அத்யாவசிய தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். சூரியனால் அவப்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே வீண் விவாதங்களை தவிர்க்கவும். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.

முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். புதன் ஆக.3ல் இடம் மாறுவதால் முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம். அதை வெற்றிகரமாக செய்து முடிக்க பெண்கள் வசம் பொறுப்புகளை ஒப்படையுங்கள். ஆக.9,10ல் பெண்களால் நன்மை காண்பீர்கள். ஆக.5,6ல் உறவினர்கள் வருகையும், அவர்கள் மூலம் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூலை 20,21,ஆக.16,17ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூலை17,18,19ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம்.

பணியாளர்கள் புதனின் பலத்தால் சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வீண் அலைச்சல், வேலைப்பளு குறையும்.
சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். ஆக.2க்கு பிறகு சக ஊழியர்களின் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து
போகவும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம். ஆக.3,4ல் அதிர்ஷ்டவசமாக வருமானம் கிடைக்கும். மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.

பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசு வகையில் பிரச்னைகளை சந்திக்கலாம். எனவே வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். ஆக.2க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கையால் பணஇழப்பைச் சந்திக்கலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும். ஜூலை 7,8,11,12,13ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஜூலை 25,26ல் பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உருவாகும். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் அதிகரிக்கும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர்.  எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். ஜூலை 22,23,24ல் மனக்குழப்பம் ஏற்படலாம். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காண்பர். பாசிப்பயறு, நெல் போன்ற தானிய வகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் வருவாய் பெருகும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்கவும்.

பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவர். குருவின் பார்வையால் சுபவிஷய பேச்சு நடக்க வாய்ப்புண்டு.  குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரவழியில் உதவி கிடைக்கும். ஆக.14,15ல் சிறப்பான நன்மையை எதிர்பார்க்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரலாம். ஜூலை27,28  சிறப்பான நாட்களாக அமையும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

* நல்ல நாள்: ஜூலை 17,18,19,25,26,27,28, ஆக.3,4,5,6,9,10,14,15
* கவன நாள்: ஜூலை 29,30 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,8
* நிறம்: வெள்ளை,பச்சை

* பரிகாரம்:
●  சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல்
●  வியாழனன்று தட்சிணாமூர்த்தி தரிசனம்
●  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு

 
மேலும் கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை) »
temple
புதனால் மாத பிற்பகுதியில் நற்பலன் அதிகரிக்கும். சுக்கிரன் நவ.22ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் ... மேலும்
 
temple
இந்த மாதம் புதன் டிச.2 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பின் அவர் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். இதை கண்டு ... மேலும்
 
temple
இந்த மாதம் டிச.3ல் புதன் சாதகமான நிலைக்கு வருகிறார். மேலும் சூரியன், குரு ஆகியோரால் நன்மைகள் தொடரும். ... மேலும்
 
temple
இந்த மாதம் சுக்கிரன் நவ.22 வரையும், புதன் டிச.2 வரையும் நற்பலன் தருவர். சனி,கேது ஆகியோராலும் நன்மை தொடரும். ... மேலும்
 
temple
கடந்த மாதம் போல் இந்த மாதமும் சுக்கிரனால்  நற்பலன் தொடரும். புதன் டிச.3ல் சாதகமான இடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.