Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) முன்னேற்றம் கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) மகிழ்ச்சி விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » ஆடி ராசிபலன் (17.7.2021 முதல் 16.8.2021 வரை)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) சுகவாழ்வு
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
16:45

இந்த மாதம் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதக பலனை சனி, கேது, குரு பகவான் முறியடித்து உங்களை பாதுகாத்து இருப்பார்கள். இந்த மாதம் மேலும் பல கிரகங்கள் சாதகமான நிலைக்கு வருகின்றன. சூரியன் மாதம் முழுவதும் சுகவாழ்வு அளிப்பார். சுக்கிரன் ஜூலை24 வரையும், புதன் ஆக.2க்கு பிறகும், செவ்வாய் ஆக.10க்கு பிறகும் நன்மை தருவார்கள்.

தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும்.  நினைத்தது விரைவில் நிறைவேறும். பெண்களால் ஏற்பட்ட களங்கம் மறையும். ஆக.2க்கு பிறகு பெண்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் தனி அந்தஸ்துடன் இருப்பீர்கள். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். ஆக.2க்கு பிறகு சகோதர வழியில் நன்மையை எதிர்பார்க்கலாம். ஆக.10க்கு பிறகு புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.  

பணியாளர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் திறமைக்கு உகந்த மரியாதை கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு புதனால்  ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன ஆக.2க்கு பிறகு மறையும். அதன்பிறகு சக பெண்ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். ஜூலை 31,ஆக.1,2ல் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.

ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். பகைவர்களின் இடையூறுகளை உடைத்தெறிவீர்கள். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து ஆக.2க்கு பிறகு விடுபடுவர்.அதன் பின் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். ஜூலை 22,23,24ல் நல்ல வருமானத்தை காணலாம். ஆக.5,6,9,10 ல் சந்திரனால் தடைகள் வரலாம்.

கலைஞர்கள் ஜூலை 24க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்த்த புகழ்,  பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். போட்டிகள் அதிகம் இருக்கும். அவப்பெயர் உருவாகலாம். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும். ஆக.10க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம். பணப்புழக்கத்திற்கும் குறைவிருக்காது. ஜூலை20,21,

மாணவர்கள் அதிக வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றுவீர்கள். ஆக.10க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் நல்ல முன்னேற்றம் காணலாம். போட்டிகளில் வெற்றி காணலாம். கெட்ட சகவாசத்தில் இருந்து சிலர் விடைபெறுவர். கல்விக்கான உதவித்தொகை கிடைக்கும்.

விவசாயிகள் நல்ல வளம் காண்பர். விளைச்சல் சிறப்பாக இருக்கும். குறிப்பாக நெல், மஞ்சள்,பழ வகைகள், சோளம், கேழ்வரகு, தக்காளி போன்ற  பயிர்கள் மூலம் அதிக லாபம் காண்பர்.  புதிய சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு ஆக.௧௦க்கு பிறகு அனுகூலமான காற்று வீசத் தொடங்கும். பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லைகள்  மறையும். அவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். பசு வளர்ப்பின் மூலம் நல்ல வருமானத்தை காணலாம்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். ஆக.11,12 சிறப்பான நாட்களாக இருக்கும்.

* நல்ல நாள்: ஜூலை  22, 23, 24, 25, 26, 31, ஆக.1,2,3,4,7,8,11,12,13
* கவன நாள்: ஜூலை 27,28 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,7,9  
* நிறம்: மஞ்சள், சிவப்பு

* பரிகாரம்:
●  சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி மாலை
●  வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு நெய் விளக்கு
●  செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம்

 
மேலும் ஆடி ராசிபலன் (17.7.2021 முதல் 16.8.2021 வரை) »
temple
அசுவினி:சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறும் அசுவினி நக்ஷத்திர அன்பர்களே நீங்கள் தைரியத்திற்கு ... மேலும்
 
temple
கார்த்திகை 2, 3, 4:உங்களை விட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையை பயன்படுத்தும் ... மேலும்
 
temple
மிருகசீரிஷம் - 3, 4:மனதில் இருக்கும் கவலைகளை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகும் ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4:எப்போதும் நிதானமாகக் காணப்படும் புனர்பூச நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் நக்ஷத்ராதிபதி ... மேலும்
 
temple
மகம்:பழகுவதற்கு இனிமையானவரான மகம் நக்ஷத்திர அன்பர்களே இந்த மாதம் எதையும் யோசித்து செய்வது நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.