Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அந்தஸ்து கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)  பெண்களால் உதவி மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) ஆதாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
16:49

குடும்ப பெரியோர்களின் ஆலோசனையும், ஒத்துழைப்பும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். புதன் ஆக.2 வரை மிதுனத்தில் இருந்து நன்மை தருவார். தற்போது செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் ஆக.10ல் சிம்ம ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார். சுக்கிரன், குரு மாதம் முழுவதும் நன்மைகளை தருவார்கள்.

சனி, ராகுவால். பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம். குடும்பத்தில் பகை, பிரிவை ஏற்படுத்துவார். எது எப்படியானாலும்  குரு, சுக்கிரன் அதை தடுத்து நிறுத்தி பாதிப்பு வராமல் பார்த்து கொள்வர். புதனால் எடுத்த முயற்சி வெற்றி அடையும்.  சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். ஆக.10க்கு பிறகு பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.

குடும்பத்தில் பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  லாபம் அதிகரிக்கும். பக்தி எண்ணம் மேம்படும். தம்பதியிடையே அன்பு, பாசம் மேலோங்கும். ஆக.2க்கு பிறகு குடும்ப விஷயங்களில் பொறுமையும் நிதானமும் தேவை. சகோதரிகள் உதவிகரமாக இருப்பர். குறிப்பாக ஜூலை 22,24ல் அவர்களால் மிகுந்த பலனை எதிர்பார்க்கலாம். ஜூலை 17,18,19, ஆக.14,15ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூலை 29,30ல் அவர்கள் வகையில் ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்கள்  பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
கடந்த கால உழைப்பின் பலன் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருப்பர். ஆக.2க்கு பிறகு  வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு  இடமாற்றம் வர வாய்ப்புண்டு. ஆக.10க்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அரசு ஊழியர்களுக்கு சிறப்பான காலகட்டம். கோரிக்கைகள் நிறைவேறும். ஆக.11,12,13 ல் எதிர்பாராத நன்மைகளை பெறலாம்.

தொழில், வியாபாரத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் லாபம் காண்பர். செவ்வாயால் பகைவர் தொல்லை குறுக்கிடலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. ஆக.2க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். ஆக.5,6ல் பகைவரை வெல்லும் ஆற்றல் பிறக்கும். எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்கும்.  

கலைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள்  கையெழுத்தாகும்.  சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.
ஆக.10க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.  

மாணவர்களுக்கு பின்தங்கிய நிலை இருக்காது. ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குருவால் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். புதன் சாதகமாக காணப்படுவதால் போட்டிகளில் வெற்றி காண்பர்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். பாசி பயறு, நெல், கோதுமை, சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாய் கொடுக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் அதிகரிக்கும். ஆக.10க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பெண்களுக்கு சமூகத்தில் மதிப்பு உயரும்.  உறவினர்களால் உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். ஆக.10க்கு பிறகு  சிறப்பான பலன் பெறுவர்.

* நல்ல நாள்: ஜூலை 17,18,19,22,23,24,27,28, ஆக.3,4,5,6,11, 12,13,14,15
* கவன நாள்: ஆக.7,8 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,7
* நிறம்: வெள்ளை, மஞ்சள்

* பரிகாரம்:
●  சனிக்கிழமையில் சனீஸ்வரர் வழிபாடு
●  திங்களன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை
●  வெள்ளிக்கிழமையில் லட்சுமிக்கு விளக்கு.

 
மேலும் கார்த்திகை ராசிபலன் (17.11.2019 முதல் 16.12.2019 வரை) »
temple
புதனால் மாத பிற்பகுதியில் நற்பலன் அதிகரிக்கும். சுக்கிரன் நவ.22ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் ... மேலும்
 
temple
இந்த மாதம் புதன் டிச.2 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பின் அவர் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். இதை கண்டு ... மேலும்
 
temple
இந்த மாதம் டிச.3ல் புதன் சாதகமான நிலைக்கு வருகிறார். மேலும் சூரியன், குரு ஆகியோரால் நன்மைகள் தொடரும். ... மேலும்
 
temple
இந்த மாதம் சுக்கிரன் நவ.22 வரையும், புதன் டிச.2 வரையும் நற்பலன் தருவர். சனி,கேது ஆகியோராலும் நன்மை தொடரும். ... மேலும்
 
temple
கடந்த மாதம் போல் இந்த மாதமும் சுக்கிரனால்  நற்பலன் தொடரும். புதன் டிச.3ல் சாதகமான இடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.