பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
03:07
சேலம்: கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி என்பர். அதற்கேற்ப, அம்மன் கோவில்களில், நேற்று (ஜூலை., 19ல்), நேர்த்திக்கடன் செலுத்தியும், வேண்டுதல் வைத்தும், திரளானோர் தரிசனம் செய்தனர்.
ஆடி முதல் வெள்ளியையொட்டி, சேலம், கோட்டை பெரியமாரியம்மன் கோவிலில், நேற்று (ஜூலை., 19ல்) காலை, 5:45 மணிக்கு, நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள், குடும்பம் சகித மாக வருகை தந்து, நீண்ட வரிசையில் நின்று, அம்மனை தரிசித்தனர். கன்னி பெண்கள், அம்மனுக்கு ஒற்றைமாலை சாத்துபடி செய்து, அங்குள்ள முகூர்த்தக்காலில், வளையல், மஞ்சள் கயிற்றை ஒருசேர கட்டி, திருமண வரம் வேண்டி வழிபட்டனர். வேண்டுதல் நிறை வேறிய தம்பதி, அம்மனுக்கு, இரட்டை மாலை அணிவித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதேபோல், குழந்தை வரம் வேண்டியும், தம்பதியினர் அம்மனை பிரார்த்தனை செய்தனர்.
மதியம், மீண்டும், அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு வரை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு, பூஜை நடந்தது. மதியம், தங்க கவச அலங்காரத்தில், அம்மன், காட்சியளித்தார். பக்தர்கள், தரிசனம் செய்ய, மதியம், 1:00 மணிக்கு, கோவில் நடை சாத்தப் படாமல், தொடர்ந்து, வழிபாடு நடந்தது. இரவு, கெஜலட்சுமி அலங்காரத்தில், செவ்வைமாரி அருள்பாலித்து, பக்தர்களை மகிமைப்படுத்தினார். மேள கச்சேரி சகிதமாக, தீபாராதனை செய்து, பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இதுதவிர, சேலம் மாவட்டத்திலுள்ள, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, 17 அம்மன் கோவில்களில், ஆடிவெள்ளி முதல் நாளில், சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடத்தி, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மழை வேண்டி குங்கும அர்ச்சனை: ஓமலூர், பெரிய மாரியம்மன், சந்தன காப்பு அலங்கார த்தில் அருள்பாலித்தார். மதியம், அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். மாலை, மழை வேண்டி, வருணபகவானுக்கு, 108 குங்கும அர்ச்சனை நடந்தது. அதில், திரளான சுமங்கலி பெண்கள் பங்கேற்றனர். தாரமங்கலம், கண்ணணூர் மாரியம்மன் கோவிலில், நேற்று முன் தினம் (ஜூலை., 18ல்) இரவு, கம்பம் நடும் விழா நடந்தது. நேற்று (ஜூலை., 19ல்), கொடிமரத் துக்கு பக்தர்கள் மஞ்சள் நீரூற்றி வழிபட்டனர். மூலவர் சன்னதியில், மாரியம்மன், காளியம் மன், சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.