சின்னசேலம்: சின்னசேலம் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் இந்தியாவில் முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களின் தரிசனம் மற்றும் ஆன்மிக பரவசமூட்டம் தேவிகளின் தத்ரூப தரிசன நிகழ்ச்சி நேற்று முன்தினம் (ஜூலை., 19ல்) துவங்கியது.
சின்னசேலம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் ஆறு நாட்கள் நடக்கிறது. துவக்க விழா விற்கு, விழுப்புரம் கிளை தலைவி அம்புஜா பெஹரண்ணி தலைமை தாங்கினார். செயலர் சரவணன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் மோகன் ஜோதிர்லிங்கங்களின் தரிசன அரங்குகளை திறந்து வைத்தார்.
தொடர்ந்து 12 லிங்க கோவில்கள், ஆன்மிக போதகர்கள், நடன மேடைகள், பஞ்ச சக்திகள் குறித்து காணொளி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், விழுப்புரம் உர விநி யோகஸ்தர் கோவிந்தசாமி, ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், செயலர் செந்தில், பொருளாளர் ராஜூ, பூமாலை உட்பட நகர வியாபாரிகள் பங்கேற்றனர். வரும் 23ம் தேதி வரை காலை 8:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்.