63 நாயன்மார்கள் திருவீதி உலா: சிவனடியார், பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2019 12:07
கரூர்: கரூரில், 63 நாயன்மார்கள் திருவீதி உலா விமரிசையாக நடந்தது. கரூர், கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில், சிவனடியார் கூட்டத்தின், 26ம் ஆண்டு விழா நடந்தது. அதைமுன்னிட்டு, பசுபதீஸ்வரர் அலங்காரவல்லி, சவுந்திரநாயகி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மாலையில், 63 நாயன்மார் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வண்ண விளக்குகளால் அமைக்கப்பட்ட சப்பரத்தில், கோவிலிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக திருவீதிஉலா நடந்தது. இதில், சிவனடியார்கள் ஏராளமானோர், மேளதாளத்துடன் பக்திப் பாடல்களை பாடி நடனமாடியபடி சென்றனர். ஓதுவார்கள் பன்னிரு திருமுறை இன்னிசை பாடல்களை பாடிச் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.