பதிவு செய்த நாள்
23
ஜூலை
2019
01:07
கடலுார் : சின்னதானங்குப்பம் நவசக்தி மாரியம்மன் கோவிலில் வரும் 26ம் தேதி செடல் உற்ச வம் நடக்கிறது. குள்ளஞ்சாவடி அடுத்த சின்னதானங்குப்பம் நவசக்தி மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம், நேற்று முன்தினம் (ஜூலை., 21ல்), கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று (ஜூலை., 22ல்), மாலை, சாகை வார்த்தல், இரவு வீதியுலா நடந்தது. நாளையும், மறுநாளும் (ஜூலை., 24, 25ல்), அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
தொடர்ந்து 26ம் தேதி காலை 9:00 மணி முதல் பல்வேறு செடல் போடுதல், இரவு வானவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் வீதியுலாவும், இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.