பதிவு செய்த நாள்
23
ஜூலை
2019
02:07
திருவள்ளூர்: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை உற்சவம், நாளை 24ம் தேதி, துவங்கி, 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, திருத்தணிக்கு செல்லவிருக்கும் பக்தர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், சார்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வந்தவாசி, செய்யார், திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை, போரூர், ஆரணி, வேலுார், ஆற்காடு, திருவள்ளுர், சித்துார், திருப்பதி ஆகிய இடங்களிலிருந்து, சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.இத்தகவலை திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.