ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழா (ஜூலை 25ல்)கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கோயிலில் காலை பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் கொடி ஏற்றம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடி அமாவாசையான ஜூலை 31 ல் ராமர் அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுத்தல், ஆக.,2ல் ஆடித்தேரோட்டம், ஆக.,5ல் சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி, அம்மன் தங்க பல்லாக்கு, ரிஷபம் வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.