பழநி, பழநி முருகன் கோயிலில் ரோப்கார் பராமரிப்பு பணிக்காக மாதத்தில் ஒருநாளும், ஆண்டுக்கு ஒரு மாதம் நிறுத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு ஜூலை 29 முதல் தொடர்ந்து 45 நாட்கள் நிறுத்தப்பட உள்ளது.ரோப்காரின் கம்பிவடம், உருளைகள், பற்சக்கரங்கள், சாப்ட், பெட்டிகள் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு தேய்மான பாகங்கள் மாற்றப்பட உள்ளது. பக்தர்கள் விரைவாக மலைக்கோயில் செல்வதற்கு 3 வின்ச்கள் காலை 5:00மணி முதல் இரவு 10:00மணி வரை இயக்கப்படுகிறது. இதனால் படி, யானைப்பாதையை பக்தர்கள் பயன்படுத்துமாறு, இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துஉள்ளார்.---