பதிவு செய்த நாள்
27
ஜூலை
2019
12:07
விருதுநகர் : சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயில், விருதுநகர் பராசக்தி மாரியம்மன், வெயிலுகந்தம்மன், காளியம்மன் கோயில், சிவகாசி பராசக்தி மாரியம்மன், பேச்சியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில்கள், ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில், ஆவாரம்பட்டி காளியம்மன் கோயில், , ஸ்ரீவி., பெரிய மாரியம்மன், சந்தனமாரியம்மன், பட்டத்தரசி அம்மன், கோட்டை காளியம்மன் என அனைத்து அம்மன் கோயில்களிலும் நேற்று இரண்டாவது ஆடி வெள்ளியை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். திரளான பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர்.