ஓசூரம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
பதிவு செய்த நாள்
29
ஜூலை 2019 02:07
விஸ்வநாதபுரம் : கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, ஓசூரம்மன் கோவில், இங்கு, தீ மிதி திருவிழா, வரும், 4ம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக, கடந்த, 26ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, பொங்கல் வைத்தலுடன் திருவிழா துவங்கியது. பின், நள்ளிரவு, 12:00 மணிக்கு, தீ மிதி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள், காப்புக் கட்டுதலும், அதைத் தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் தீ மிதி திருவிழாவில், தினமும், இரவு, 8:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடைபெறும்.தீ மிதி திருவிழாவான, 4ம் தேதி, பகல், 11:30 மணிக்கு, அங்கபிரதட்சனம் மற்றும் வேப்பிலை நேர்த்திக் கடனும் நடைபெறும். அதன்பின், மாலை, 6:00 மணிக்கு, பக்தர்கள் தீ மிதி திருவிழாவும், தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில், அம்மன் வீதியுலாவும் நடைபெறும்.
|